இஞ்சி வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.180

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து இஞ்சி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கிறது.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி டி–பிளாக் அம்மா பூங்கா அருகே ஒவ்வொரு புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு வெளியூர்களிலிருந்து காய்கறிகள், பழங்கள் டன்கணக்கில் விற்பனை வருகிறது. தற்போது மழை பெய்துவருவதால் சந்தைக்கு இஞ்சி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.150க்கு விற்ற இஞ்சி தற்போது ரூ.160 முதல் ரூ.180 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கிறது. புரட்டாசி மாதம், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை வருகை காரணமாக இஞ்சி விலை மேலும் உயரவாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினர்.–––––

Advertisement