வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?

2

சென்னை: வடகிழக்கு பருவமழை நேற்று தமிழகத்தில் துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்று மதியம் முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு விடிய விடிய பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.

குறிப்பாக, கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, தேனி மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் அடையாமடையில் 179.6 மில்லி மீட்டர் மழையும், ஈரோட்டில் 156 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை நிலவரத்தை தற்போது காணலாம்.

பகுதி - மழை அளவு (மில்லி மீட்டரில்)

அடையாமடை (கன்னியாகுமரி) - 179.6

ஈரோடு - 156

பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் - 153

மாக்கினாம்பட்டி (கோவை) - 149

பெரியகுளம் - 147

பெருஞ்சாணி (கன்னியாகுமரி) - 127.6

பரமத்தி, (கரூர்) - 126.6

வைகை அணை - 124.2

பழனி - 118

பஞ்சப்பட்டி, (கரூர்) - 115

புத்தன் அணை - (கன்னியாகுமரி) - 112

சிற்றார் 1(கன்னியாகுமரி) - 111.8

ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) - 108.2

பெரம்பலூர் - 103

ஆண்டிப்பட்டி - 102

ஊத்துக்குளி - 100

சிவகிரி, (தென்காசி) - 100

மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) - 97.6

குருந்தன்கோடு (கன்னியாகுமரி) - 97

வத்தலை அணைக்கட்டு (திருச்சி) - 94

மொடக்குறிச்சி - 94

பல்லடம் - 92

போத்தனூர் ரயில்நிலையம் -90.6

சிவலோகம் - 88.6

திற்பரப்பு - 88

கோடநாடு - 81

நாமக்கல் - 80

பரமத்தி வேலூர் - 80

தக்கலை - 80

மஞ்சலாறு - 79

நம்பியாறு அணை - 75

ஊத்து (நெல்லை) - 74

பவானி - 72

மதுக்கரை ( தாலுகா ஆபிஸ்) - 72

Advertisement