சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சோலார் நிறுவன குடோனில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள், மின்சாதனப் பொருட்களைத் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த புரோஜென் ரினியூவபிள்ஸ் நிறுவனம், கஸ்தூரிரெங்கபுரத்தில் சோலார் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குடோனில் வைக்கப்பட்டிருந்த 90 டிரம் காப்பர் கேபிள்கள், 100 மீட்டர் காப்பர் கேபிள், 90 காப்பர் எர்த் ராடுகள் ஆகியவை கடந்த 1ம் தேதி இரவு திருடப்பட்டன.
இதுகுறித்து நிறுவன மேலாளர் ஆனந்த், 40, அளித்த புகாரின்படி, திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் சிங் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இதுதொடர்பாக திசையன்விளை புலியடி தெரு முத்து கிருஷ்ணன், 24, தலைவன்விளை லோகேஷ், 24, திசையன்விளை காமராஜர் நகர் சந்துரு, 21, ஆகிய மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு