தேசியபூப்பந்து விளையாட்டு பள்ளி மாணவிகள் அசத்தல்
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில், சமீபத்தில் தேசிய அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது. அதில் தமிழக அணியில், விழுப்புரம் மாவட்டம் சார்பில், முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், மாணவி ராஜ ஸ்ரீ,16 ; ஐவர் மற்றும் இரட்டை போட்டிகளில் இரண்டு தங்க பதக்கம்பெற்றார். மாணவி சாருலதா,16; ஐவர் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.
மாணவி யோகேஸ்வரி,16; ஐவர் போட்டியில் தங்க பதக்கமும், கலப்பு இரட்டையர் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.
மேலும் தேசிய அளவில் பூப்பந்தாட்ட போட்டியில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கக்கூடிய ‘ஸ்டார் ஆப் இந்தியா’ என்ற விருதினை மாணவி யோகேஸ்வரி பெற்றார்.
தமிழக அணிக்கு தங்கப்பதக்கம் பெற்று தந்த மாணவிகளை பள்ளி தாளாளர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் ஜேக்கப் ஜீவானந்தம், ஜெயசெல்வி, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர்கள் பிரேம்ராஜ்குமார், விமல் பாராட்டினர்
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்