சோலார் பேனல் அமைப்பதற்கு சங்கராபுரத்தில் சிறப்பு முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சோலார் விண்ணப்ப சிறப்பு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டம் சங்கராபுரம் கோட்ட மின் பகிர்மானம் சார்பில் சேவா சேது அபியான் திட்ட சோலார் விண்ணப்ப முகாம் ரோட்டரி மண்டபத்தில் நடந்தது.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தலைமை தாங்கினார்.சங்கராபுரம் கோட்ட செயற்பொறியாளர் கோவிந்தசாமி வரவேற்றார்.

செயற்பொறியாளர்கள் சுப்புராஜ்,முத்துக்குமாரசாமி ஆகியோர் சோலார் திட்டம் செயல்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினர்.

சோளார் விற்பனையாளர்கள் தங்கள் நிறுவணத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.சங்கராபுரம் இந்தியன் வங்கி மேலாளர் விஸ்வாஸ்நாயக், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன்,ரோட்டரி கிளப் துணை ஆளுனர் சுதாகரன் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் உதவி செயற்பொறியாளர்கள் திருமலைவாசன்,சேகர்,உதவி பொறியாளர்கள் கண்ணன்,ஜெயமுர்த்தி,ராஜசுதா,கார்தி,ராஜேஷ்,நுார்முகமது,ராமச்சந்திரன் மற்றும் 350க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.செயற்பொறியாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

Advertisement