ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், போக்கு காட்டி வரும் பருவமழையின் காரணமாக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், விவசாயிகள் கடந்த செப்.,மாதம் பருவமழை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்தனர். விவசாயிகள் நெல் விதைப்பு செய்த பின்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக, வயல்களில் நிலவிய ஈரப்பதத்தின் காரணமாக, சில கிராமப் பகுதிகளில் மட்டும் நெல் பயிர்கள் முளைத்தன. அதன் பின்பு போதிய மழைப்பொழிவு இல்லாததன் காரணமாக, முளைத்த நெல்பயிர்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகியதன் காரணமாக, பெரும்பாலான விளை நிலங்களை உழவு செய்து மறு விதைப்பு செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன், வெயில் முகம் இன்றி, மழை பெய்வது போல் கூடுவதும், லேசான தூறல் மழையுடன் கடந்து செல்வதுமாக உள்ளதன் காரணமாக, கடந்த சில தினங்களாக விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீளும் நிலை உள்ளது.
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?