மாநில போட்டிக்கு தகுதி மாணவனுக்கு பாராட்டு

உடுமலை: மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வாகியுள்ள, ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவனை, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், அரசுப்பள்ளி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

குடிமங்கலம் ஒன்றியம், ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் திலீப், பாவனை நடிப்பு பிரிவில், முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் பாராட்டினர்.

Advertisement