பஸ்ஸ்டாண்ட் பணிகள் முடியாமல் ‘டெண்டர்’ விட பொதுமக்கள் எதிர்ப்பு: ரத்து செய்தது உசிலை நகராட்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் பணிகள் நிறைவடையாத நிலையில் கடைகள், சுகாதார வளாகங்களை ஏலம் விட ஆன்லைனில் டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
உசிலம்பட்டி நகராட்சியில் பஸ்ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி 2023 முதல் நடக்கிறது. இதுவரை பணிகள் முடியாமல் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் வரும் அக்.26 ல் ஆன்லைனில் கடைகளை ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவித்திருந்தனர். ஆன்லைன் டெண்டரில் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாமுக்கும் நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.
நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கமிஷனர் சங்கர்கணேஷ் மற்றும் கடைகள் டெண்டர் எடுக்க விருப்பமுள்ளோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி உள்ளிட்ட சிலர், ‘‘பஸ்ஸ்டாண்ட் பணிகள் நிறைவு பெறவில்லை; கவுன்சிலர்கள் தீர்மானம் இல்லை; ஆறு மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடக்காத நிலையில் தன்னிச்சையாக அதிகாரிகள் டெண்டர் விடுவது ஏன்’’ என்று கேட்டனர்.
கவுன்சிலர்களும், ‘‘கடந்தாண்டு டிசம்பரில், அதிகாரிகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. பணிகள் முடிந்தபின்பே டெண்டர் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தோம். ஆனால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்’’ என்றனர்.
இவ்வாறு டெண்டர் விடுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், வரும் அக்.26 ல் நடக்க இருந்த டெண்டர் மற்றும் பயிற்சி முகாமை ரத்து செய்வதாக கமிஷனர் சங்கர்கணேஷ் உட்பட அதிகாரிகள் அறிவித்தனர்.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு