மேற்கு வங்க நபரை தாக்கியவர் கைது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசாத், 51, திருப்பூர் ராயபுரத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆக. 25-ம் தேதி, அவரைச் சந்திக்க அதே மாநிலத்தைச் சேர்ந்த, பல்லடம் கணபதிபாளையத்தில் வசித்துவந்த சபீர் உசேன், 26, தனது நண்பருடன் வந்தார்.

அப்போது தான் வைத்திருந்த ரூ.4,000-ஐ ஆசாத் எடுத்துவிட்டதாக சபீர் உசேன் கூறினார்; ஆசாத் மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்துப் பேசலாம் எனக் கூறி, ஆசாத்தை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற சபீர் உசேனும் அவரது நண்பரும், பெருமாநல்லுார் அருகே காட்டுப்பகுதியில் வைத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பினர். காயமடைந்த ஆசாத் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் திருப்பூர் வடக்கு போலீசார், சபீர் உசேனை நேற்று கைது செய்தனர்.

Advertisement