சிங்காநல்லூர் புறக்கணிப்பு ‘மாஜி’ எம்.எல்.ஏ., புகார்
கோவை: மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவை, திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் சந்தித்தார். அப்போது அவர், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பல பணிகளை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சில பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மண்டல கூட்டத்தில் பரிந்துரை செய்த எந்த பணியும் நிறைவேறவில்லை.
மாமன்ற அவசர கூட்டத்தில் கிழக்கு மண்டல வளர்ச்சி பணி சேர்க்கவில்லை. மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட பணிகள் சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன.
பல பணிகளை ஆய்வு செய்யாமல், முன் அனுமதி கொடுத்து நிறைவேற்றியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் செய்யும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். சிங்காநல்லூர் பணிகளை புறக்கணிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?
Advertisement
Advertisement