சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் பேரணி
கடலுார்: கடலுார் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக சென்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடலுார் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்காடு, தியாகவல்லி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நிலம் கையகப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க வலியுறுத்தி தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாரயணசாமி தலைமையில் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி தியாகவல்லி குளக்கரையில் இருந்து பேரணியாக தியாகவல்லி சென்றனர். அங்கு நடந்த கூட்டத்தில், ‘சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் முடிவை நிரந்தரமாக திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட உறுதிமொழி ஏற்றனர்.
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?