பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் பதிவாகுமா?

திருப்பூர்: பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்குவதுடன், கடந்த ஆண்டைவிட இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.டி.பி., சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட பனியன் அண்ணா தொழிலாளர்கள் சங்க (ஏ.டி.பி.) மாவட்ட செயலாளர் கண்ணப்பன், தொழில் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

பல மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பள உயர்வு ஒப்பந்தத்தை, தொழிலாளர் நலன் கருதி முத்தரப்பு ஒப்பந்தமாக உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.

கோவைக்கு பதிலாக திருப்பூர் தொழிலாளர் துறை அலுவலகத்திலேயே முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டும், இதுவரை நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஒப்பந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

Advertisement