மழைநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஆர்.வி., தெருவில், பருவமழைக்கு முன், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், ஆர்.வி., தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந் துார்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் செல்வதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதிமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம், கோரிக்கை வைத்தனர்.
அதன்பின், மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பருவமழைக்கு முன் இப்பணிகள் முடிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.