அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
மதுரை: நீண்ட துாரம் செல்லும் அரசு பஸ்களில் இருக்கைகள் குறுகலாக இருப்பதுடன், கால்களை நீட்டிப் பயணம் செய்ய போதிய இடவசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக அதிக எண்ணிக்கையில் '2+2' இருக்கை அமைப்பு பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1100க்கும் மேற்பட்ட பஸ்கள் நீண்ட துாரத்துக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் குறைவான எண்ணிக்கையிலான அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் மட்டுமே உள்ளன. இதில் மட்டுமே '2+2' சாய்வு இருக்கை வசதி உள்ளது.
பிற அரசு பஸ்களில் இருக்கைகள் குறுகலாக இருப்பதுடன், கால்களை நீட்டிப் பயணம் செய்ய போதிய இடவசதி இல்லை. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உயரமானவர்கள் உள்ளிட்டோர் கால்களை வசதியாக வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் அகலமான '2+2' சாய்வு இருக்கைகளுடன் புதிய பஸ்களை வடிவமைக்க வேண்டும் என்ற பயணிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
தற்போது புதிதாக இயக்கப்படும் பிஎஸ்6 ரக பஸ்களில் நீண்ட துாரப் பயணத்துக்கு ஏற்ற இருக்கை வசதிகளை ஏற்படுத்தினால் பயணியரின் சிரமத்தைக் குறைக்க முடியும். 4 மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் பஸ்களில் இருபுறமும் '2+2' அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், வருவாயில் ஏற்படக்கூடிய மாற்றத்தை கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யலாம்.
பஸ்களின் உட்புற வடிவமைப்பை மாற்றும்போது இருக்கைகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட எடை, அவசரகால வெளியேறும் வசதி, பயணியர் செல்லும் பாதை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். நவீன பஸ்களை இயக்குவதுடன், பயணியரின் வசதிக்கும் முக்கியத்துவம் அளிக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிக்கிட் வாங்கிட்டு போறோம் னு சொல்லுவீங்களா?
முதலில் வந்த திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சீட் நல்ல இடைவெளி விட்டு 2+2 ஆக இருந்தது குடிக்க தண்ணீர் வைப்பார்கள் சீரான வேகம் ஆனால் ஓசியில் நடத்துனர் ஓட்டுனருக்கு சாப்பாடு தரும் திராட்சை உணவகத்தில் நிறுத்துவாங்க விலை அதிகம் இருக்கும். கழிவறை சுத்தமாகவே இருக்காது .அருகில் இருக்கும் பெட்டி கடைகளில் காலாவதியான சிப்ஸ் பிஸ்கட் விற்கப்படும் . தென்மாவட்ட பயணிகள் நிறைய அனுபவித்து நொந்துபோனது முற்றிலும் உண்மை
கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள். கால்களையும் நீட்டாதீர்கள்.
மாவட்டங்களுக்கு இடையே ஓடும் அரசு பேருந்தில் மூவர் இருக்கைகளில் நடுவில் இருக்கும் இருக்கையில் இந்த பஸ்ஸை வடிவமைத்த அறிவாளி இன்ஜினியரை உட்கார வைத்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய வைக்க வேண்டும் அப்போது தெரியும் இதன் கஷ்டம்
திருப்பூரில் இருந்து மதுரை போவதற்கு உள் எவ்வளவு நொறுக்குத்தீனி தள்ள முடியுமே அவ்வளவும் போகும்... பேருந்து நிலையம் சென்ற உடனே பயணிகளை இறங்க விடாமல் மசால் பொறி, வெள்ளரி பிஞ்சு, வேகவைத்த நிலக்கடலை, வாழைபழம், சமோசா, கொய்யா அட ஐயா பேருந்து ஒரு மினி குப்பை தொட்டி ஆக்கிவிடும் இது இன்றும் நடக்கிறது.... இதுல இரண்டு சீட்டை போட்டு மதுரை போவதற்கு உள்ளாகவே அவ்வளவு அபச்சாரம் நடந்துவிடும்..... சீக்கிரம் விளக்கை அணைக்கவும்......
நாற்பது வருடங்களுக்கு முன் பேருந்து இருக்கைகள் 4 1 என்ற முறையில் இருக்கும் அந்த ஒரு சீட் ஓட்டுனருக்கு நேர் எதிரே ஆரம்பித்து நீள வாக்கில் நடத்துநர் அமரும் கடைசி வரை இருக்கும்.... பயணம் நன்றாக இருக்கும் அரைமணி நேரத்துக்கு ஒரு வண்டி, ... அதிகமாக பெண்கள் பயணிப்பதை பார்க்க முடியாது, முதுகு வரை தான் இருக்கை இருக்கும் தப்பி தவறி தூங்கினால் பின் மண்டையில் அடிபடும், கழுத்து சுளுக்கிவிடும்... ஆனால் தற்போது நமக்கு ஜன்னல் சீட் தான் வேண்டும் கொஞ்சம் குண்டான ஆட்கள் வந்தால் அண்ணே ஆள் வருது என்பார்கள் பிறகு அப்பாவி ஒல்லி குச்சி வந்தால் சிரிச்சுகிட்டே வாங்க சார் உட்காருங்க என்பதை பார்க்கலாம்.... அரசு பஸ்ஸில் நன்றாக உட்கார முடியும் நின்று பயணம் செய்ய முடியாது.... தனியார் பேருந்தில் நின்று செல்ல வசதியாக இருக்கும் அமர்ந்து பயணம் செய்ய முடியாது....
2+3 பரவாயில்லை ஆனால் 2 பிளஸ் 3ிலும் இரண்டு சீட்டுகள் உள்ள பக்கம் சீட்டுகளுக்கு இடைவெளி மிகவும் குறைவாக இருக்கின்றது இதனால் நார்மல் ஹைட்டு உள்ள என்னைப் போன்ற ஆட்களுக்கு கூட நான் ஐந்து எட்டு தான் கால் அடுத்த சீட் பின்புறம் இடிக்கின்றது எனக்கு முன்பே மூட்டு வலி உள்ளது இந்த சீட்டில் இடித்து இடித்து அந்த வலி பெரிதாகி விடுகிறது அதே சமயம் மூன்று சீட்டுகள் உள்ள பக்கம் அந்த இடைவெளி கொஞ்சம் அதிகமாக உள்ளது இந்த மூன்று சீட்டுகள் பக்கம் உள்ள இடைவெளி போல் இரண்டு சீட்டுகள் உள்ள இடைவெளியும் சரிசமமாக செய்தால் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும்
கிராமப் புறங்களில் ஓடுகின்ற பேருந்துகள் அனைத்தும் மிகவும் மோசம். காயலான் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பேருந்துகள், பயணிகள் பேருந்து என்ற பெயரில் ஓடுகின்றன. ஒரு பக்கம் இலவசம் மறுபக்கம் ஓட்டை உடைசல் பேருந்துகளால், உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம்!.
இப்பொழுதுதானா இந்தப்பிரச்சினை... முன்னரே அரசு பேருந்தில் உயரமானவர்கள் அமர்வதே மிகச்சிரமம். எப்பொழுதும் டவாலி சகிதம் காரில் போவோர் நிறுவனத்தை நடத்தினால் அப்படிதான் இருக்கும்.
சென்னை மின் பேட்டரி பஸ்களில் சீட் நன்கு வசதியாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் ஆண்கள் அமர்ந்து செல்வதற்காக காத்திருந்து இந்த பஸ்களில் ஏறுவார்கள். அனைத்து பஸ்களிலும் இலவசம் என்றவுடன் இதிலும் வயதான ஆண்கள் கூட காசையும் கொடுத்து நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது?
பாலின பாகுபாடு கூடாது என்று கூறும் அரசே.....பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம், பெண்களுக்கு உரிமை தொகை, etc என்று அரசே பாலின பிரிவிணை பார்க்கலாமா....
அருமையான கருத்துமேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு