கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!

40

-சிறப்பு நிருபர்-

டில்லியில் கரப்பான்கும்பல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எஸ்ஐஆர் விவகாரத்தில் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என காரணம் சொன்னார்கள். ஆனால், அவர்களின் உள்நோக்கம் வேறு. அதனை சமீபத்தில் அவர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். ஆட்சி மாற்றம் வேண்டும் என பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பேட்டி கொடுத்து தங்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினர். அதில் தவறில்லை எனவும் நியாயப்படுத்தினர்.

கரப்பான் கும்பலுக்கு அமெரிக்காவில் இருந்து நிதி கிடைக்கிறது என அந்நாட்டை சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பேட்டி கொடுத்தார். பிரதமர் மோடிக்கு எதிரான சில அமெரிக்க தொழிலதிபர்கள், கரப்பான் கும்பலுக்கு நன்கொடை அளித்து போராட்டத்தை தூண்டி விடுவதாகவும், உலகம் முழுவதும் உறுதியான நிலைப்பாடு கொண்ட தலைவர்களை குறிவைப்பது அவர்களின் நோக்கம் எனவும் கூறினார். தங்களுக்காக வாதாட சிறந்த வழக்கறிஞர் குழு உள்ளதாக கரப்பான் கும்பலின் சவுரவ் தாஸ் கூறியுள்ளார்.

அந்த வழக்கறிஞர்களில் பிருந்தா தாசும் ஒருவர். இவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்காக கருணை மனு போட்டவர் ஆவார்.

வெளிநாட்டை சேர்ந்த, நிக்கல் ஆசியா, வோர்ல்ட் இன் மோசன், கிளாஸ் மார்க்கெட் போன்ற ஊடகங்கள் திடீரென கரப்பான் கும்பலின் போராட்டத்தை முதல் நாளில் இருந்து வெளியிடுகின்றன. ஒரே மாதிரி செய்தி, தலைப்பை பயன்படுத்துகின்றன.

பிரான்ஸ் 24 ஊடகத்தில் வேலை பார்த்த நேஹா போராவும் கரப்பான் கும்பலின் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தற்போது அந்த ஊடகமும் போராட்டம் குறித்து செய்தி வெளியிடுகிறது. ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலின் டிரைவராக வேலை பார்த்த ஒருவரும், கரப்பான் கும்பலின் போராட்டத்தில் முக்கிய பங்கு எடுத்து வருகிறார்.

இத்தகைய நபர்கள், தங்கள் மீதான புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் மறைக்க ஜனநாயகம் எனக் கூறி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement