இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்

நாமக்கல்:அசோக் லேலண்ட் பவுண்டேஷன் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சார்பில், இளம் கிராம தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கொல்லிமலை செம்மேட்டில், வழிகாட்டி தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் தலைமை வகித்தார். அசோக் லேலண்ட் பவுண்டேஷன் மேலாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட தொழில் மைய அலுவலர் யூரி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை முதல்வர் பச்சையப்பன் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர், நான்கு பேருக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், கடனுதவிக்கான காசோலை வழங்கி பேசினார்.

Advertisement