பள்ளியில் ரூ.64.47 லட்சத்தில் ஆய்வக கட்டடம் திறப்பு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், நபார்டு திட்டத்தில், 2025-26ம் ஆண்டில், 64.47 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அறிவியல் ஆய்வக கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கல்பனா தலைமை வகித்தார்.
அரூர் நகராட்சி துணைத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
Advertisement
Advertisement