மருத்துவமனையை துாய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்
அரூர்: அரூர், அரசு மருத்துவ மனையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் இடம், மருந்தகம், தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்சைக்களுக்கான மருந்து இருப்பு, உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தாய்மாமன் தங்க மோதிர திட்ட செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையை துாய்மையாக பராமரித்தல், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க, மருத்துவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மருத்துவமனையை துாய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, அரசு துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்