அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

ஈரோடு:ஈரோடு, பெரியமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த, 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக கோவில் வளாகத்தில், கொலு பொம்மைகள் வைத்து வண்ண

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழாவின் நான்காவது நாளான, நேற்று காலை பெண்கள் கொலு பொம்மை முன் அமர்ந்து, அம்மன் பாடல்களை பாடி வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதையடுத்து கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரிய மாரியம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கொங்காலம்மன், பத்ரகாளியம்மன், சுயம்பு மாரியம்மன் உட்பட மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

ண்டும்.

Advertisement