பேப்ரிக் விற்பனையில் 'இமயம்' தொட்ட 'இமயம் பேப்ரிக்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்'

குறு, சிறு மற்றும் நடுத்தர பின்னலாடை உற்பத்தியாளருக்கு தேவையான, புதுரக 'பேப்ரிக்' துணிகளை, ஒரே இடத்தில் புதிய டிசைன்களில் வழங்கி வருகிறது, இமயம் பேப்ரிக்ஸ் அண்ட் டெக்ஸ்டைல் நிறுவனம்.

சூரத், லுாதியானா, சீனா ஆகிய பகுதியில் உள்ள, உற்பத்தியாளரிடம் இருந்து 'பேப்ரிக் கொள்முதல் செய்து, திருப்பூர் மட்டுமல்ல, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி என, தென்னிந்தியா முழுவதும் பேப்ரிக் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் இருந்து, விரிவுபடுத் தப்பட்ட வகையில், வியாபாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரின் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், இமயம் பேப்ரிக்ஸ் வாடிக்கையாளராக மாறியுள்ளனர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலான, 'பேப்ரிக்' ரகங்களை மகிழ்ச்சியாக, சரியான விலையில் வாங்கி செல்கின்றனர்.

அங்கேரிபாளையம் மெயின் ரோடு மற்றும் சிவன் தியேட்டர் ரோடு பகுதிகளில், இரு ஷோரூம்கள் வாயிலாக பேப்ரிக் விற்பனை நடந்து வருகிறது. வாடிக்கையாளர் விரும்பும் டிசைன்களில் எளிதாக 'பேப்ரிக்'கள் கிடைக்கின்றன. அதாவது, 'ரெடி டூ கட்' என்ற கூறுவது போல், வாங்கி சென்றால், உடனடியாக ஆடை வடிவமைக்கலாம் என்ற அளவுக்கு, தேவையான கலர்களில், தரமான டிசைன்களில் பேப்ரிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இமயம் பேப்ரிக்ஸ் அண்ட் டெக்ஸ்டைல் நிறுவன நிர்வாக இயக்குனர் மருதாசல மூர்த்தி கூறியதாவது:

கடந்த, 22 ஆண்டுகளாக, பேப்ரிக் விற்பனை செய்து வருகிறோம்; சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதுடன், லுாதியானா, சூரத் பகுதியில் இருந்தும் பேப்ரிக் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். பாலியஸ்டர், பாலிகாட்டன், ஸ்பன் பாலிஸ்டர், நைலான், லைக்ரா ஆகிய பேப்ரிக் விற்பனை செய்கிறோம். தற்போது, 80க்கும் அதிகமான (டிசைன்) ரகங்களில், 30க்கும் அதிகமான கலர்களில் பேப்ரிக் சப்ளை செய்கிறோம்.

உற்பத்தியாளரின் தேவையை பூர்த்தி செய் யும் வகையில், அனைத்து ரக 'பேப்ரிக்' ரகங்களும் உள்ளன. சாயமிடப் பட்ட பாலியஸ்டர் 'பேப்ரிக்' விற்பதால்,உற்பத் தியாளருக்கு சாயமிடும் வேலை குறைத்துள்ளது. எங்களிடம் பேப்ரிக் வாங்கி, உடனே உற்பத் தியை துவக்கலாம். அதா வது, 'ரெடி டூ கட்' என்ற வகையில், சேவை யாற்றி வருகிறோம்.

பிராண்டட் நிறுவனங்கள் உட்பட, அனை வருக்கும் தரமான, நியாயமான விலையில், பேப்ரிக் சப்ளை செய்கிறோம். விளையாட்டு சீருடைகள், பள்ளி விளையாட்டு சீருடைகள் தைக்க, தரமான பேப்ரிக் எங்களிடம் கிடைக்கும்; ஆண்டு முழுவதும் சீரான விற்பனை நடந்து வருகிறது. திருப்பூர் மட்டுமல்லாது, தென் மாநிலங்கள் முழுவதுக்கும், பேப்ரிக் விற்பனை செய்து வருகிறோம். மேலும் தகவல்களுக்கு, 98422 56067, 90038 67890, 97916 33374 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement