டெங்கு தடுப்பு மருத்துவ முகாம்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட, 4வது வார்டு, காமராஜர் நகரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். சுகாதார பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தண்ணீர் தேங்கி உள்ளதா, குடிநீர் தொட்டிகள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்து, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினர். மருத்துவக்குழுவினர் அப்பகுதி மக்களை பரிசோதித்து, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் மக்கள் சுயமாக மருந்து உட்கொள்வதையோ, சுயபரிசோதனை செய்து கொள்வதையோ தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Advertisement