சூரிய வீடு இலவச மின்சார திட்ட விழிப்புணர்வு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார், பொம்மிடி மற்றும் மொரப்பூர் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சோலார் பேனல், அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம், கடத்துார் மின் வாரிய அலுவலக வளாகத்தில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

ஜாக்குலின் ராணி (ஊரக மின்வசதி கழகம்), முன்னிலை வகித்தார். உதவிசெயற்பொறியாளர் ஹரிஹரன், கடத்துார் கோட்ட உதவிசெயற்பொறியாளர்கள் அருண்பிரசாத், செந்தாமரை, தங்கம் பாலகிருஷ்ணன், பணியாளர்கள் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டனர். இதில், 15 பேர், சோலார் பேனல் திட்டத்தில் முகாமில் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன் பெற மத்திய மற்றும் மாநில அரசு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்ட பணி முடிவடைந்த, ஏழு நாளில் இருந்து, 30 நாட்களில் மின் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும். இதன் துண்டு பிரசுரங்கள் கடத்துார், பொம்மிடி மற்றும் மொரப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement