விஷம் வைத்து கொல்லப்பட்ட மயில்கள்
மொரப்பூர்: மொரப்பூர் அருகே விவசாய நிலத்தில், 10 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், மயில்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனிடையே உணவு தேடி கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள் விளைநிலங்களில் புகுந்து மக்காச்சோளம், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை கொத்தித்தின்று சேதப்படுத்துகின்றன. சாகுபடி பயிர்களின் மகசூலை பாதுகாப்பதற்காகவும், மயில்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், அவற்றிற்கு விஷம் வைத்து கொல்லும் சம்பவங்கள் நடக்கிறது. இந்நிலையில் நேற்று, மொரப்பூர் அடுத்த சின்னாகவுண்டம்பட்டியில், தனியார் விவசாய நிலத்தில், 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. மக்காச்சோள பயிர்களை மயில்கள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக, அவற்றிற்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு