நாய்கள் கடித்து மான் சாவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய, 4 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு மான், மயில், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவற்றின் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நிலவும் கடும் வறட்சியால், உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் இருந்து மான் உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.அவ்வாறு வரும்போது, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் துரத்தி கடிப்பதில் மான்கள் உயிரிழக்கின்றன. இந்நிலையில், நேற்று மதியம் குரங்குபள்ளம் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி, வெளியில் வந்த, 2 வயது பெண் மானை, தெருநாய்கள் துரத்தி கடித்ததில் உயிரிழந்தது. இது குறித்து, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு