அரூரில் சாரல் மழை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மழை பெய்தது.

இந்நிலையில், நேற்று மாலை, 3:45 மணி முதல், 4:30 மணி வரை சூறைக்காற்று வீசியது. பின், 5:00 மணி முதல், அரூர், மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement