மேலாளரிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்தவர் கைது

அடையாறு: மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மருந்து நிறுவனத்தின் விற்பனை மேலாளர் அந்தோணி அகஸ்டின், 33. கடந்த மாதம் 24ல், அடையாறில் உள்ள மருந்து வினியோகஸ்தர்களிடம் பணம் வசூலித்து, இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி புறப்பட்டார்.

கிண்டி சர்தார் படேல் சாலையில் செல்லும்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வழிமறித்த ஆறு பேர் கும்பல், அந்தோணி வைத்திருந்த, 24 லட்சம் ரூபாயை பறித்து தப்பியது.

அடையாறு போலீசார், தனிப்படை அமைத்து அவர்களை தேடினர். விசாரணையில், அடையாறு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த பாபு ஞானப்பிரகாசம், 28, என்பவரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்கள் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Advertisement