சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொட்டம்பாளையம் தேவாங்கபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெள்ளியங்கிரி, 55; கடந்த, 2025 பிப்.,6ல் மளிகை கடை ஒன்றின் முன் ஏழு வயதான இரு சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த வெள்ளியங்கிரி, சிறுமிகளின் கையை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசில், அவர்கள் புகார் செய்தனர். போலீசாருக்கு ‘சிசிடிவி’ மூலம் ஆதாரம் கிடைத்தது. இதனால் போக்சோவில் வழக்குப்பதிந்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.
இவ்வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். வெள்ளியங்கிரிக்கு ஏழாண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.