லாரி மோதி முதியவர் பலி

கரூர்:கோவை மாவட்டம், விளாங்குறிச்சி இந்து நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப், 30; இவர் கடந்த, 15 இரவு, போர்டு காரில், தென்னிலை அருகே, நொச்சிக்கோட்டை வலசு பகுதியில், தாத்தா நாராயணசாமி, 80, என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்த சலீம், 45, என்பவர் ஓட்டிச்சென்ற லாரி, கார் மீது மோதியது. அதில், காரில் அமர்ந்திருந்த
நாராயணசாமி, தலையில் காயமடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புகார்படி, லாரி டிரைவர் சலீம் மீது தென்னிலை போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement