நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
சோபியா: இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரியா நோக்கிப் பறந்த பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கேரிய தலைநகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில் 51 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 57 பேர் பயணம் செய்தனர்.
விமானம் ருமேனியா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தகவல் வந்தது. மேலும், விமானத்தின் உள்பகுதியில் சந்தேகத்திற்குரிய மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக அவசர தகவலை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.
விமானத்தை உடனடியாக அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. பல்கேரிய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானத்திற்குப் பாதுகாப்பாக, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று உடனடியாகப் பறந்து வந்து வழிகாட்டியது.
போர் விமானத்தின் முழுப் பாதுகாப்புடன், பயணிகள் விமானம் பல்கேரிய தலைநகர் சோபியாவில் உள்ள விமான நிலையத்தில் நள்ளிரவில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், உடனடியாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தை முழுமையாகச் சுற்றி வளைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை குறித்த இறுதி தகவல் வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன், டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் விமானத்தை, துணை விமானி தரையில் மோதி வெடிக்க செய்த முயற்சியை, இந்திய விமான கேப்டன் ஸ்மிட் மிச்சாரும், சில இஸ்ரேலிய பயணிகளும் சேர்ந்து நடுவானில் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மையுற்று வெற்றி தமிழகத்தை படைப்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
கையில் கட்டுடனும், மார்பில் காயங்களுடன் ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் புகைப்படம்; குற்றவாளிகளுக்கு போலீசார் வலை
-
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
-
பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டிப்பு
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்