நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
ஜெருசேலம்: இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நெதன்யாகுவை வலிமையான தலைவராகவும், அமைதிக்கான சிறந்த கூட்டாளியாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் நெதன்யாகு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்தால், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்காவே நேரடியாக மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, டிரம்பின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‛ டிரம்ப் மிகச்சிறந்த நண்பராக உள்ளார் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை இரு நாடுகளும் தடுத்து நிறுத்தும்' இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்
டிரம்ப் ஆதரவு வெற்றியை உறுதி செய்யாது
இருப்பினும், டிரம்பின் ஆதரவு நெதன்யாகுவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யாது எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முக்கியப் பங்கு வகிக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும்
-
கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மையுற்று வெற்றி தமிழகத்தை படைப்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
கையில் கட்டுடனும், மார்பில் காயங்களுடன் ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் புகைப்படம்; குற்றவாளிகளுக்கு போலீசார் வலை
-
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
-
பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்