மைல் கல்லுக்கு ஆயுத பூஜை

குளித்தலை:குளித்தலை அடுத்த குமாரமங்கலம் - பணிக்கம்பட்டி -- அய்யர்மலை நெடுஞ்சாலையில், நடுப்பட்டி மைல் கல்லில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக சாலைப்பணியாளர்கள் சார்பில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

முன்னதாக, மைல் கல்லுக்கு, வாழைக்கன்று நட்டனர். தொடர்ந்து, சாலைப்பணியாளர்கள் பயன்படுத்தும் அரிவாள், மண்வெட்டி, கடப்பாரை, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்தனர். பின், வாழை இலையில் பழங்கள், பொரி, கடலை, சுண்டல், அவல், வெல்லம் வைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த பூஜையில், உதவி கோட்ட பொறியாளர் கணபதி, உதவி பொறியாளர் ஜெயபாலன், சாலை ஆய்வாளர் சேகர் மற்றும் சாலைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement