பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
லாகூர்: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான சவுத்ரி முகமது சர்வார் மாடியிலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானான்.
முகமது சர்வார், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவன உறுப்பினர். இவனை கடந்த 2016ம் ஆண்டு, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.
ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கம்:
முகமது சர்வார், பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், துணைத் தளபதி சைபுல்லா கசூரி ஆகியோருக்கு மிக நெருக்கமானவனாக வலம் வந்தவன். பாகிஸ்தான் மார்கசி முஸ்லிம் லீக் என்ற அரசியல் அமைப்பை முகமூடியாகப் பயன்படுத்தி, லஷ்கர் அமைப்புக்கு பஞ்சாப் மாகாணத்தில் நிதி திரட்டுவது மற்றும் நிதியைக் கையாள்வது இவனது முக்கிய வேலை.
மர்ம மரணம்:
இந்நிலையில், லாகூரில் உள்ள மர்கஸ் குதேசியா என்ற கட்டடத்தின் 4வது மாடியிலிருந்து சர்வார் மர்மமான முறையில் கீழே விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவன் தவறி விழுந்தானா அல்லது உள்மோதல் காரணமாக யாராவது தள்ளிவிட்டனரா என்பது குறித்து மர்மம் நீடிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சர்வாரின் மகன் ஒரு சாலை விபத்தில் பலியானான் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய சம்பவம் போன்றே..:
இதேபோன்று கடந்த 2016ம் ஆண்டில், கள்ளநோட்டு புழக்கத்தின் முக்கிய புள்ளியான ஜாவேத் கானானி என்பவன், கராச்சியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்திலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் பலியானான். தற்போது அதே பாணியில் லஷ்கர் பயங்கரவாதி சர்வாரும் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி நல்லவர்கள் எல்லாம் சேரந்து பயங்கரவாதிகளை தள்ளி கொன்று விட்டால் இந்தியாவுக்கு கொஞ்சம் நிம்மதி?
மகிழ்ச்சி
நம்ம ஆளு யாரோ துரந்தர் மாதிரி அங்கு இருக்கான்னு நினைக்கிறேன்மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி