சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
தட்சிண கன்னடா: கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் வலேன்சியா சர்ச் உள்ளது. சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர், சிப்ரியன் பின்டோ, 58. கடந்த ஆக., 14ம் தேதி, 15 வயது சிறுவன் ஒருவர் சர்ச்சிற்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.
அங்கு வரவேற்பு பகுதியில் இருந்த பின்டோ, சிறுவனிடம் பேசி தன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அறைக்குள் சென்றதும், சிறுவனை கட்டிப்பிடித்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, தன் நண்பர்களிடம் சிறுவன் கூறியுள்ளார்.
அவர்களும், 'நாங்களும் இதுபோல பாதிக்கப்பட்டோம்' என கூறியுள்ளனர். இதுபோன்ற தொல்லை தொடர்ந்ததால், தன் பெற்றோரிடம் சிறுவன் விஷயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையறிந்த சிப்ரியன் பின்டோ தலைமறைவானார். விசாரணையில், அவர் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புராவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை கைது செய்த போலீசார், மங்களூரு அழைத்து வந்தனர். அவர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
No Dearth of Cookedup FalseCases by CaseNewsVotePower Hungry MAFIAs As they are Never Punished
இதை நம்ம தொலைக் காட்சியில் விவாதிக்க மாட்டார்கள்.செய்தியிலும் வராது.தினமலர் போன்ற முதுகெலும்பு உள்ள ஊடகங்கள் மட்டும் இந்தச் செய்தியைத் தருகின்றன
ஏழை கிறிஸ்தவர்களிடம் கட்டாயமாக பிடுங்கும் தசமபாகத்தில் தின்று கொழுக்கும் இந்த பாதிரிகளுக்கு அரிப்பு ஏற்பட்டு இதுபோன்ற வேலைகளை செய்வதில் ஆச்சரியமில்லை
ஒரு சில பாதிரியார்கள் இவரை போல தான் இருக்கிறார்கள்..
இவரை போன்ற குற்றவாளிகளை உடனே சுட்டு பொசுக்க வேண்டும்.மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை