கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மையுற்று வெற்றி தமிழகத்தை படைப்போம்; முதல்வர் விஜய் உறுதி
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள், நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் துவங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்; நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்; ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும். அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
@block_G@
ஸ்டாலின் சொல்வதில்லை!
ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை. அவர் முதல்வராக இருந்தபோதும் கூறியது கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வாழ்த்து சொன்னதில்லை. 'ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்' என, ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் இதுவரை ஹிந்து பண்டிகைகளுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.block_G
உங்களை சுற்றி இருக்கும் திருட்டு திவிடத்தின் கைக்கூலிகள், காசுக்கு சோரம் போகும் அதிகாரிகள், பாட்டாளி கட்சி, பிஜேபி கட்சிகலிருந்து வந்த துரோகிகள், தேர்தல் வியூக அமைப்பாளர், இயேசுவின் பேரை சொல்லி கூழை கூப்பிடும் போடும் புறம்போக்குகளை கண்காணித்தது காலை எடுங்கள். உளவு பிரிவில் நேர்மையாளர்களை நம்புங்கள், தான கல்வி, தொழில் மேன்மை அடையும். இது சத்தியம்.
வாக்கு. வங்கிகாக. இருந்தாலும். ஆயுத. பூஜை, விஜய. தசமிக்கு. வாழ்த்து. தெரிவிக்கும். பண்பாவது. இந்த. அரசுக்கு. இருக்கிறதே
அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது தமிழக அமைச்சர்கள் தமிழை கொலை செய்யாமல் ஒழுங்காகப் பேசவும், சரஸ்வதி சபதம் படத்தில் பேசாத சிவாஜி திடீரென பேச்சு வந்து அகரமுதல எழுத்தெல்லாம் பாடுவாரே அது போல சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் தினந்தோறும் மாண்புமிகு முதல்வர் பேசிடவும் அந்தக் கல்விக் கடவுள் சரஸ்வதி அருள் புரிய வேண்டுகிறேன்.
நமது வெற்றி முதல்வர் விஜய் எந்த கட்சியிலிருந்தும் வராமல் தானே தன்னந்தனியாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தார்.
ஐயா விஜய் அவர்களே உங்களுக்கே உங்களுக்கு என்று உங்கள் மனத்திற்கு உகந்த கொள்கைகளை வகுத்துக் கொள்ள வாய்ப்பு இன்னமும் உள்ளது.
உங்களது உண்மையான விசுவாசிகளை வைத்து உங்கள் வெற்றிக் கழகத்துக்கான கொள்கைகளை முடிவு பண்ணுங்க- தீய சக்தியான திமுகவை மக்கள் தூக்கி தூரப் போட்டது போல நீங்கள் காப்பியடித்திருக்கும் திமுக வினரின் மக்களை நாசமாக்கும் அக்மார்க் தீய..திராவிட கொள்கைகளை தூக்கி தூர வீசுங்க.
இந்த ரீல்ஸ் பைத்தியங்களை வைத்துக்கொண்டா?
இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் ஐந்து வருட ஆட்சி முடிவில் வெற்றித் தமிழகமாக இருக்காது. கடனில் மூழ்கிய வெத்துத் தமிழகமாகவே இருக்கும்! வருத்தத்துடன் ஒரு தமிழனாக பதிவு செய்கிறேன்.
பிரேம்ஜி. நீங்க சொன்னது போன ஐந்து வருடத்தில் நடந்து விட்டது
விலைவாசி யை கண்ட்ரோல் பண்ணுங்க, கல்வி, தொழில் வளர்ச்சி எல்லாரும் சொல்றதுதான்
இப்போ தவேக வில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்து போகவில்லை. விஜய் சொல்வது எல்லாம் கேட்ட இனிமையாக உத்வேகம் கொடுக்கிறது. ஆனால் செயல்கலில் வெற்றிகள் இல்லை.
அருண் , முன்னாள் சென்னை கமிசினரை எப்படி தவேக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக நியமிக்கலாம் ../. இப்போ அவர் POSCO வழக்கை மறைக்க பணம் வாங்கினார் என்று நிரூபணம் ஆகி உள்ளது. இவ்வளவு மோசமான ஒரு பொலிசிஸ் ஆபிசரை அடையாளம் காண முடியாத அரசு எப்படி நல்ல செயல்களை செய்ய முடியும் .?.
விஜக்கு தேவை நிர்வாக திறமை உள்ள ஒரு அமைப்பு . தவேக அரசியல் தலைவர்கள் எல்லோரும் முதல் தலைமுறை அரசியல் வாதிகள். இவர்களுக்கு தேவை expert சப்போர்ட்.
இதைசெய்யாமல் வேறும் பேச்சு கட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கை போய் விடும். விஜயின் மாஸ் சப்போர்ட் கட்சிக்கு தேவை, அதே போல் திறனுள்ள ஆட்சி தேவை. அரசியலில் இருக்க சேய்யும் செயல் எல்லாம் வெற்றி பேரனும் no excuse in politics. .
விஜயினுடைய திறமையையும் அனுபவத்தையும் வைத்து அவரால் போஸ்டர் ஓட்டுபவர்களை தான் உருவாக்க முடியும்
இவரும் இவருடைய மொழிக் கொள்கையும் இவர் கல்வியை வளர்க்கப் போகிறாரா
அதுக்கெல்லாம் நிறைய அனுபவம் வேண்டும்.
அல்லது தன்னலம் அற்ற அறிவு சார்ந்தவர்களை தன்னுடன் வைத்து கொண்டு வேலையை பார்க்க.வேண்டும்.மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா