ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; ராஜஸ்தானில் 3 பேர் கைது

5

- நமது நிருபர் -

மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள ஜூஹூ பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்று கொண்டிருந்தார். 3 பைக்கில் வந்த கும்பல், அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கார் டிரைவர் உள்பட இருவர் காயம் அடைந்தனர். டைகர் ஷெராப் காயங்களுடன் இருக்கும் முதல் புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின; மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, டைகர் ஷெராபின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்த போது முதல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. படத்தில், டைகர் ஷெராப் சட்டை அணியாமல் அமர்ந்து இருக்கிறார்.

வலது கை, தோள்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கட்டுகள் போடப்பட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கை போலீசார் கண்டுபிடித்தனர். மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஷெராப் இடம் தொலைபேசியில் பேசினார். உடல்நலம் குறித்து விசாரித்தார்.

3 பேர் கைது





12 தனிப்படைகளை அமைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலை போலீசார் தேடினர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வைத்து 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பீஹாரை சேர்ந்த ரோஷன், 22, ஹரியானாவை சேர்ந்த ரஹான், 18 மற்றும் 17 வயது சிறுவன் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement