கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும்! : முதல்வருக்கு டாக்டர் பக்தவத்சலம் வேண்டுகோள்
கோவை: 'கோவை வளர்ச்சிக்கு ரிங் ரோடு, எய்ம்ஸ் மருத்துவமனையை, தமிழக முதல்வர் விஜய் ஏற்படுத்தி தர வேண்டும்' என, கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை அவர் செய்து தருகிறார். தற்போதைய புரட்சித்தலைவராக விஜயை நான் கருதுகிறேன். அவர் அவதார புருஷராக வந்துள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், மதுக்கடைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். லஞ்சத்தை அடியோடு ஒழிக்க முயற்சி செய்து வருகிறார்.
கோவையின் தேவைகள் குறித்து எடுத்துக்கூறக்கூடிய தலைவர்கள் யாரும் இங்கு இல்லை. கோவை, தொழிலாளர்கள், முதலாளிகள், தொழில் முனைவோர்கள், தொழில் நிறுவனங்களால் தானாக உருவானது. கோவையில், பல லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறையினர், மருத்துவமனைகளால் கோவை கட்டமைக்கப்பட்டது. ஆனால், கோவைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை.
கோவையில் வாகனங்கள் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கோவைக்கு தேவையான ரிங் ரோடு இல்லை. தேவையான ரோடுகள், பார்க்கிங் வசதிகள் இல்லை. கோவை யாரும் கவனிக்கப்படாத நகரமாகிவிட்டது.
கோவைக்கு வரும் முதல்வருக்கு மூன்று கோரிக்கைகள் வைக்கிறேன். ரிங் ரோடு அமைக்க வேண்டும். கோவையின் மக்கள் தொகை தற்போது, 20 லட்சம். அடுத்த சில ஆண்டுகளில், 40 லட்சமாகும்.
ஏழை மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மதுரையை போல் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். மத்திய அரசு, நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களை இங்கு கொண்டு வரும். அதன் மூலம் சிறந்த மருத்துவம் கிடைக்கும்.
பல ஆண்டுகளுக்கு பின் ஜி.டி., மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது போதாது. பல மேம்பாலங்களின் தேவை உள்ளது. அதை ஏற்படுத்த வேண்டும். மருத்துவச் சுற்றுலா வளர்ந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டினரும் இங்கு வருகின்றனர்.
அவர்களின் தேவைக்காக விமானநிலையத்தை விரைந்து விரிவுபடுத்த வேண்டும். கோவையில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு கோவைக்கு அருகில் துணை நகரம் ஏற்படுத்த வேண்டும். பிரதமருடன் நெருக்கம் காட்டி வரும் தமிழக முதல்வர் கோவையின் தேவைகளை கேட்டு பெற வேண்டும். இது கோவை மக்களின் தாழ்மையான கோரிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.
சாந்தி கியர்ஸ் பண்ற மாதிரி பண்ணுங்க
சட்டத்திற்கு அப்பாற்பட்டு மருத்துவமனை மற்றும் சினிமா தியேட்டர் ஒன்றாக செயல்படுவதை எதிர்த்த கலெக்டர் மலைசாமியை சமாதானப்படுத்தி இருக்கலாம் புரட்சி தலைவர்.... தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வெள்ளகிணறு, சரவணம்பட்டி, கோவில் பாளையம், பீளமேடு பகுதிகளை வளைத்து போட்டது இவர்கள் மற்றும் லாட்டரி கூட்டம்.... ஆகவே இயற்கையாக பாசம் இருக்கட்டும்..... மக்களுக்கு உதவி செய்யவே வேண்டாம், உபத்திரம செய்யாமல் இருப்பது நலம்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத வசதியா கோவையில் இருக்கு ? சென்ற மாதம் கூட நாட்டின் இராணுவ மந்திரியின் மனைவி சிகிச்சைக்காக வந்துள்ளார்கள்.... குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியவில்லை எப்படி மருத்துவ கழிவுகளை சுத்தம் செய்ய முடியும்.... ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக ஆலோசனை பெற நோயாளிகள் காத்து கிடக்கிறார்கள். திறமையான மருத்துவர்களுக்கு பல லட்சம் சம்பளம் தர நிர்வாகம் தயார் ஆனால் அவர்கள் பங்குதாரர்களாக சேர்க்க சொல்லி நிர்பந்திக்கிறார்கள்.... பலர் Benz BMW காரில் வருகிறார்கள் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ஆகிறது.... மருத்துவமனையில் வேலை செய்யும் இளம் வயது ஆண்கள் பெண்கள் பகல் இரவு இல்லாமல் சுற்றி திரிவது, ஒரே அறையில் தங்கி........ அவர்கள் பேச்சு நடத்தை உள்ளே அன்பு, வெளியே வந்தால் மனித தன்மை இல்லாமல் இருப்பதை பார்க்கலாம்.... நிலத்தின் விலை உச்சம் தொட்ட நிலையில் எய்ம்ஸ் கோவையில் அமைவது கடினம்..... சாய்பாபா கோவில் புதுப்பாலம் கீழே செல்ல வெறும் பத்தடி தான் உள்ளது எப்படி கனரக வாகனங்கள் செல்லும் .... இன்றைய சூழ்நிலையில் யாரும் ஒரு சதுர அடியை கூட அரசுக்கு விட்டுதர மாட்டார்கள். மண் ஆசை, பணத்தாசை, உயிர் ஆசை அழிவு ஆரம்பமாகி விட்டது.
அடியே என்பதற்கு பெண்டாட்டி இல்லையாம், அதற்குள் பிறக்கப்போகும் பிள்ளைக்கு பெயர் வைத்தான் என்பது போல் மதுரை எய்ம்ஸே இன்னும் முடிந்தபாடில்லை, அதற்குள் கோவைக்கு எய்ம்ஸா?
சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவு கட்டுப்படியாகும் நிலையில் மருத்துவமனை தேவை. ஒரு அரசு மருத்துவ மனையில் அலோபதி தவிர ஆயுர்வேதம் சித்த வைத்தியங்கள் பிரிவுகள் இருக்கவேண்டும். அலோபதி வைத்தியத்தில் பக்க விளைவுகள் உள்ளன. உடனே தீர்வு உண்டு. ஆனால் நிரந்தர தீர்வு கிடையாது. மருந்துகள் விலை அதிகம் இதர வைத்தியங்களில் நிரந்திர தீர்வு உண்டு கொஞ்சம் கூடுதல் நாள் ஆகும் மருந்துகள் விலையும் கட்டுக்குள் இருக்கும்
கோவை, கடந்த பத்து ஆண்டுகளாக , ரோடு விரிவாக்கம் , மேம்பாலங்கள் , கட்ட, லட்சம் மரங்களுக்கு மேல் வெட்டி சாய்க்கப்பட்டன , ஆண்டு முழுவதும்
ஊட்டி போல இருந்த கோவை இப்போது பாலைவனம் போல, ஆண்டு முழுவதும் வெயில் வாட்டுகிறது அனல் பறக்கிறது , சாலைகளில் ஒதுங்குவதற்கு ஒரு சிறு நிழல் கூட கிடையாது , பல கிலோமீட்டருக்கு ஒரு மரம் கூட கிடையாது , வாகனங்களில் சென்றால்
வேகிறது,
இதெல்லாம் எப்படி சரி செய்வார்கள்
யார் செய்வார்கள் என்பது கேள்வி, எங்கெங்கோ மரம் வைக்கிறோம் வளர்க்கிறோம் என்று சொல்லி போட்டோ பாஸ் கொடுப்பவர்களுக்கு, அரசு அனுமதியும் ஊக்கமும் கொடுத்தால்,, நகர் முழுவதும் சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்க ஆரம்பித்தால் நாலைந்து வருஷங்களில் கோவையின் வெப்பம் கொஞ்சம் மாறும் ...
3 மருத்துவக் கல்லூரிகள் உள்ள பகுதிக்கு எய்ம்ஸ் வேறு எதற்கு?
நண்பரே, எய்ம்ஸ் மருத்துவ மனை கோவைக்குத் தேவை. அதிக மருத்துவ மனைகள் வந்தால் குறைந்த செலவில் நல்ல மருத்துவம் கிடைக்க வாய்ப்புண்டு. இலங்கையில் இருந்து மருத்துவத்திற்காக கோவையை நோக்கி வருபவர்கள் அதிகம். மருத்துவ மனைகளை ஒட்டி பிற தொழில்களும் வளரும் . என் பார்வையில் இன்று திறந்த பெரியார் நூலகம் வேஸ்ட் . அனைத்து கல்லூரிகளிலும், பல்கலையிலும் நூலகங்கள் உள்ளன. அது தவிர்த்து மாவட்ட பொது நூலகமும் ஆங்காங்கே உள்ளது. படிக்க வருபவர்கள்தான் தேவை.
மருத்துவ மனைகளின் நாகரமாக கோவையை மாற்றாதீரகள். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகள் போதுமானது. கோவைக்கு வேறு ஏதாவது முடிந்தால் நல்லது செய்யுங்கள்.
டாக்டர் உங்களுக்கு கோவையில் நல்ல மறியாதை இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த அரசு தொடைநடுங்கி அரசு. எதையும் கேட்டு பெற வாய்ப்பில்லை.
முதலில் உங்கள் மருத்துவமனையில் கட்டணம் பாதியாக குறைங்க. கோவையிலியே மிக அதிகம்...மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு