மேற்கு வங்கத்தில் சோகம்; துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 20 பேர் பலி
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மூச்சுத்திணறி மயங்கி விழுந்தவர்களில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வடக்கு கோல்கட்டாவில், சோர்பகன் சர்போஜனின் என்ற இடத்தில் துர்கா பூஜையை கொண்டாட பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. சப்தமி நாள் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் அங்கு திரண்டனர். கூட்டம் அதிகரித்த தருணத்தில் பந்தலின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதல்கட்டமாக பலியானவர்கள் 20 பேர் என தெரிய வந்திருக்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முதல்வர் சுவேந்து அதிகாரி, அதிகாரிகளுடன் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். மேலும் விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் அவர்களிடம் கேட்டறிந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு கவர்னர் ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;
கோல்கட்டாவில் துர்கா பூஜை பந்தல் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்கள் பறிபோனது குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (7)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18 அக்,2026 - 12:35 Report Abuse
நானெல்லாம், "இன்று இப்படம் கடைசி" என போஸ்டரில் ஒட்டும் வரை அந்த சினிமாவிற்கு செல்ல மாட்டேன், 0
0
Reply
venugopal s - ,
18 அக்,2026 - 10:42 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் 0
0
Reply
காளிதாஸ் - ,
18 அக்,2026 - 09:43 Report Abuse
ஜெய் .. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
18 அக்,2026 - 08:58 Report Abuse
ஆழ்ந்த அனுதாபங்கள் .... இந்த நவீன இந்தியாவில் எத்தனை பேரு உயிரிழந்தாங்க என்பதில் ஒவ்வொரு மீடியாவுக்கும் மாறுபாடு .... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா ?? 0
0
Reply
Ramki KS - ,
17 அக்,2026 - 23:09 Report Abuse
கரூர் நெரிச்சல் திருட்டு கும்பலால் உண்டாக்கப்பட்டது போல
அங்கும் மர்ம நபர்கள் கைவரிசை இருக்குமோ? 0
0
Aarbinms - Bangalorw,இந்தியா
18 அக்,2026 - 07:09Report Abuse
தன் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒருத்தனும் வரக் கூடாது என்று திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதுதான் கரூர் கொலை சம்பவம். கெடுவான் கெட்டு போனான். முன்னமே ஈர்ப்பு சக்தி இல்லாததால் குருமூர்த்தி சொன்னது போல் திருட்டு த்ரவிஷங்களின் கதை முடிந்தது 0
0
Barakat Ali - Medan,இந்தியா
18 அக்,2026 - 08:58Report Abuse
தமிழகத்தில் நடந்தது தேர்தலுக்கு முன்பு .... ஆகவே புரிந்துகொள்ளக்கூடியது ... அங்கே அப்படியா ?? 0
0
Reply
மேலும்
-
இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை
-
ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள்
-
புதிய ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டர் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
-
வரி விலக்கு வழங்கியதற்கு வர்த்தக ஒப்பந்தமும் காரணம்: சொல்கிறார் அமெரிக்க அமைச்சர்
-
மாநில தடகளம் 206 பேர் பங்கேற்பு
-
பாரா ஆசிய விளையாட்டு: 11 பதக்கங்களை குவித்தது இந்திய அணி
Advertisement
Advertisement