மழையால் போட்டி பாதியில் ரத்து: 'டி-20' தொடர் சமன்
பெங்களூரு: ஐந்தாவது 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தானது. 'டி-20' தொடர் 2-2 என, சமன் ஆனது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல், 3வது போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது, 4வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என, சமநிலையில் இருந்தது.
புவனேஷ்வருக்கு இடம்: பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் பைனல் போன்ற 5வது, கடைசி 'டி-20' போட்டி நடந்தது. மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது.
மழை நின்ற பின், தலா 9 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் நீக்கப்பட்டு ஷிவம் துபே, புவனேஷ்வர் குமார் இடம் பிடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் 'லெவன்' அணியில் மாற்றமில்லை. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இஷான் விளாசல்: இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. கீமோ பால் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக் (6), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இஷான் கிஷான், ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய 2வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 24 ரன் விளாசினார். ஷாமர் ஜோசப் 'வேகத்தில்' இஷான் கிஷான் (30 ரன், 10 பந்து, 2X6, 3X4) வெளியேறினார். ஷாமர் ஜோசப் பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு அனுப்ப, இந்திய அணி 2.5 ஓவரில் 50 ரன்னை எட்டியது.
ஷாமர் ஸ்பிரிங்கர் 'வேகத்தில்' சஞ்சு சாம்சன் (16) போல்டானார். குடகேஷ் மோதி வீசிய 6வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (22), கீமோ பால் பந்தில் அவுட்டானார். கீமோ பால் வீசிய 7வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய நமன் திர், ஸ்பிரிங்கர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். திலக் வர்மா (7) சோபிக்கவில்லை.
மழை குறுக்கீடு: இந்திய அணி 7.4 ஓவரில் 118/5 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. நமன் திர் (24) அவுட்டாகாமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால், ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து தொடர் 2-2 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பை பகிர்ந்து கொண்டன.
தொடர் நாயகன்
இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 261 ரன் எடுத்தார். இதன்மூலம் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (181 ரன், 5 போட்டி) அதிக ரன் எடுத்த இந்திய வீரரானார்.
* அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கீமோ பால் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 போட்டியில், 8 விக்கெட் சாய்த்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், நமன் திர் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.
@block_B@
கடைசியாக 2022ல் சர்வதேச 'டி-20'ல் விளையாடிய இந்தியாவின் புவனேஷ்வர் குமார், 106 போட்டிகளுக்கு பின் நேற்று இந்திய லெவன்' அணியில் இடம் பிடித்தார். நீண்ட இடைவேளிக்கு பின், சர்வதேச 'டி-20' 'லெவன்' அணியில் இடம் பிடித்த இந்திய வீரரானார் புவனேஷ்வர். இதற்கு முன் கலீல் அகமது 104 போட்டிகளுக்கு பின் 'லெவன்' அணிக்கு திரும்பினார்.block_B
@block_B@
சர்வதேச 'டி-20' அரங்கில், ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் இஷான் கிஷான் 3வது இடம் பிடித்தார். இவர், இந்த ஆண்டு 55 சிக்சர் பறக்கவிட்டார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (70 சிக்சர், 2026), சூர்யகுமார் யாதவ் (68 சிக்சர், 2022) உள்ளனர்.block_B
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு