ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
துாத்துக்குடி: ஜாதி ரீதியிலான அடையாளங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தசரா விழாவையொட்டி ஜாதி ரீதியிலான அடையாளங்களுடன் கூடிய வீடியோக்கள் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன், 20, என்பவர், கடந்த ஆண்டு தசரா விழாவின் போது ஜாதி அடையாளங்களுடன் கூடிய வீடியோவை தற்போது அவரது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டது தெரியவந்தது.
விசாரணை நடத்திய போலீசார் மாயகிருஷ்ணனை நேற்று கைது செய்து அவருக்கு அறிவுரை வழங்கினர்.
ஜாதி அடையாளத்துடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டால் போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள் என மாயகிருஷ்ணன் பேசும் வீடியோவை பதிவு செய்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு