கொல்கத்தா பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்

2

கொல்கத்தா:கொல்கத்தாவில் இன்று (அக்டோபர் 17, 2026) நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது பதிவில்,

"கொல்கத்தாவில் நடந்த கூட்ட நெரிசல் மிகவும் வேதனை அளிக்கிறது. குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா தனது பதிவில்,

மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள எனக்கு, இந்தத் துயரச் செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவிக்கின்றேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement