வன விலங்கு மேலாண்மை பயிற்சி 16 மாநில வன அதிகாரிகள் பங்கேற்பு
கூடலுார்: முதுமலையில், நடந்த வன விலங்கு மேலாண்மை குறித்த பயிற்சி முகாமில்,16 மாநில வன அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவையில் உள்ள மாநில வன பணிக்கான, மத்திய உயர் பயிற்சி மையத்தில், 16 மாநில வன அதிகாரிகள், அலுவலர்களுக்கான வனவிலங்கு மேலாண்மை குறித்த, 5 நாட்கள் பயிலரங்கம் 12ம் தேதி துவங்கியது.
அதில், முதுமலை புலிகள் காப்பகம் மேம்பட்ட வனவிலங்கு மேலாண்மை பயிற்சி மையத்தில், புலிகள் காப்பக மேலாண்மை மற்றும் தேசியப் புலிகள் காப்பக ஆணையத்தின் நிலையான செயல்பாடு, நடைமுறைகள் குறித்த, 4வது பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில் தேசிய புலிகள் காப்பக தென் மண்டல உதவி தலைமை வன பாதுகாவலர் ஹரிணி பங்கேற்று, தேசிய புலிகள் காப்பகத்தின் நிலையான செயல்பாட்டுகள், நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள், புலிகள் காப்பகம் திட்டம் தயாரிப்பதில் உள்ள சமீபத்திய போக்குகள், அணுகுமுறைகள் குறித்து விளக்கினார்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், 'மனித விலங்கு மோதலுக்கான அடிப்படை காரணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களை தடுக்க எடுக்க வேண்டிய செயல் திட்டங்கள்' குறித்து விளக்கினார். முகாமில், ‘16 மாநிலங்களை சேர்ந்த துணை வன பாதுகாவலர்கள், உதவி வன பாதுகாவலர்கள், வன அலுவலர்கள்,’ என, 34 பேர் பங்கேற்றனர்.
மேலும்
-
கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!
-
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்