வேலை நேரத்தில் இல்லை வெற்றி பயண பஸ்கள்: மம்சாபுரம் மக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரத்தில் இருந்து காலையில் வேலை நேரத்தில் போதிய அளவிற்கு வெற்றிப் பயண பஸ்கள் இல்லாததால் ஆட்டோக்களில் கட்டணம் கொடுத்து பெண்கள் பயணித்து வருகின்றனர்.
பேரூராட்சி பகுதியான மம்சாபுரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அரசு, தனியார் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், சுய தொழில் செய்வோர் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தினமும் காலையில்
தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு சிவகாசி, சாத்துார், விருதுநகர், மதுரை போன்ற வெளியூர்களுக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர்.
ஆனால் காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை போதிய அளவிற்கு வெற்றிப் பயண பஸ்கள் இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணித்து வருகின்றனர்.
எனவே காலையில் வேலை நேரத்தில் மம்சாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையத்திற்கு குறைந்த பட்சம் 15 நிமிடத்திற்கு ஒரு வெற்றிப் பயண பஸ் இயக்க தொகுதி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!
-
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்