பெண் விவசாயிகள் தின விழா
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் பெண் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அம்சவேணி தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் லதா, அருப்புக்கோட்டை உதவி இயக்குனர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் பேசினர்.
வேலை சுமையை குறைக்கும் வேளாண் தொழில்நுட்பங்களையும் பெண் விவசாயிகளையும் திறமையான வேளாண் விரிவாக யுத்திகள் பற்றி விளக்கினார். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆனந்தி, ஜடா கவிதா, பண்ணை மேலாளர் ஜீவா ஆகிய பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொழில் முனைவோர்கள் மேகலா உமா தேவி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். இருவருக்கும் தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement