ஆலோனைக்கூட்டம்

விருதுநகர்: தேவர் ஜெயந்தி, குருபூஜை, மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடந்தது.

மரியாதை செலுத்த விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் கலெக்டரிடம் முன் அனுமதி அக். 23க்குள் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகள் பொருத்தி செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

Advertisement