மஞ்சுவிரட்டு முன்விரோதம் வாளால் வெட்டியவர்கள் கைது

திருப்புத்துார்: திருப்புத்துார் சாம்பாண் ஊரணி தெரு கண்ணன் மகன் சிவன் 19. மாடுபிடி வீரரான இவரை அக்.,13 இரவு திருப்புத்துார் சர்க்கரை19 சிவகங்கையிலிருந்து உங்களைப் பார்க்க சிலர் வந்துள்ளதாக கூறினார். சிவன் நண்பர்கள் ஆதீஸ்வரன்19,பிரித்தியங்கரன்18, ஆகியோருடன் சீதளிக் கீழ்கரை தெருவிற்கு சென்றுள்ளார்.

அங்கு 3 டூ வீலர்களில் இருந்த 8 பேர், இவர்களை அரிவாள் மற்றும் வாள்களால் வெட்டினர். அதில் சிவன் தப்பி விட்டார். அவருடன் சென்ற ஆதீஸ்வரன், பிரித்தியங்கரன் ஆகியோர் மீது வாளால் வெட்டியதில் காயம் அடைந்தனர்.

திருப்புத்துார் போலீசார் விசாரிக்கையில், திருக்கோஷ்டியூரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட முன் விரோதமே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிய வந்தது.

சர்க்கரையை பிடித்த போலீசார் விசாரிக்கையில் மதகுபட்டி அருகே நகரம்பட்டி சண்முகராஜா மகன் யுவராஜ்24, காளையார் மங்கலம் அருகே சானா மங்கலத்தைச் சேர்ந்த சங்கர் மகன் அஜய்22, கெளரிபட்டி தங்கமணி மகன் தினேஷ்25, மற்றும் இளங்கோவன் மகன் ஸ்ரீதர்26 உள்ளிட்ட 8 பேர் தாக்கியது தெரிந்தது.

நால்வரை கைது செய்த போலீசார், மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.

Advertisement