வாகனங்களில் காய்கறி விற்பனை மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் சரக்கு மினி வேன்களில் காய்கறி,பழங்கள் விற்கப்படுகின்றன.இந்த வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிக ஒலி பெருக்கி சத்தத்துடன் அனைத்து தெருக்களிலும் சென்று

விற்பனை செய்வதால் தினசரி மார்க்கெட்,மற்றும் சாலையோர நிரந்தர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மார்க்கெட் வியாபாரிகள் வாகன விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் கூறியது: வெளியூர்காரர்கள் வாகனங்களில் வந்து பொருட்களை விற்கின்றனர். மக்கள் அந்த விலையை ஒப்பிட்டு எங்களிடம் கேட்கின்றனர்.பொருள் விலையை தான் பார்க்கிறார்கள். தரத்தை பார்ப்பது இல்லை. தினமும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் செய்தே விற்க வேண்டி உள்ளது. தற்போது கடைகள் அருகே வாகனங்களை நிறுத்தி விற்கும் நிலைக்கு வந்து விட்டது.எனவே அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கூறினர்.

Advertisement