சாயல்குடியில் 300 கிலோ பாலித்தீன் பறிமுதல்
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பொதுமக்கள் கடைகளுக்கு மஞ்சள் பை கொண்டு செல்லவும், உணவுப் பொருள்களுக்கு எவர்சில்வர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். நேற்று காலை சாயல்குடி நகர் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, அலுவலர் கரிமுல்லா, இளநிலை உதவியாளர் சுப்ரதீபம், அலுவலகப் பணியாளர்கள் மகேஸ்வரி, முத்துமாரி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கடைகளில் பயன்படுத்திய 300 கிலோ பாலித்தீன் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு