வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்

சேலம்:வடமாநிலங்களில் நவராத்திரி விழாவை, துர்கா பூஜை பெயரில், பிரமாண்ட பந்தல் அமைத்து, துர்க்கை அம்மனின் பல்வேறு வடிவங்களை அலங்கரித்து வைத்து, 10 நாட்கள் கொண்டாடுவர்.

அதேபோல் சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், அவரவர் பகுதி

களில் துர்கா பூஜை கொண்டாடுகின்றனர். குறிப்பாக நாராயணர் தெருவில் உள்ள குலாலர் திருமண மண்டபத்தில், பல்வேறு அலங்காரத்தில் துர்க்கை அம்மனை வைத்திருந்தனர். மேலும் பாரம்பரிய, 'கர்பா, தாண்டியா' நடனங்களை ஆடி கொண்டாடினர்.

வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி கொலு விழா, கடந்த, 11ல் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலையில் நடக்கும் கொலு பூஜையில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என, முப்பெரும் தேவியர் அம்மன்களை போல் அலங்கரித்து கொலுவில் அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதை காணும் பக்தர்கள், அம்மன் நேரில் ஆசி வழங்கியதாக பரவசம் அடைகின்றனர்.

தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நவராத்தி விழாவின் ஏழாம் நாளான நேற்று, உற்சவர் அம்மனுக்கு கோவிந்தராஜ பெருமாள் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement