சென்னைக்கு இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

-நமது நிருபர்-

அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வட கடலோர பகுதிகளில் புதிய மேக கூட்டங்கள் உருவாகி உள்ளன. சென்னையில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் கன மழை பெய்த நிலையில், இன்றும் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு அமைச்சர்கள் 8 பேரும் உடனே சென்னை வர முதல்வர் விஜய் உத்தரவிட்டார். ''சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மழை நீரை அகற்றும் பணிகளை 15 மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் சென்று பார்வையிட வேண்டும்'' என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நிருபர்களிடம் சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறுகையில், ''சென்னையில் கனமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம்; மழை பாதிப்பு நிலவரங்களை முதல்வர் விஜய் கண்காணித்து வருகிறார்; மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது'' என்றார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

விடிய விடிய கொட்டிய மழை; சென்னைக்கு இன்றும் வார்னிங்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement