மத்திய பிரதேசத்தில் சோகம்; லாரி மோதியதில் பக்தர்கள் 12 பேர் பலி
நமது நிருபர்
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். நெல் ஏற்றி வந்த லாரி பக்தர்கள் மீது மோதியது. 12 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
நவராத்திரி காலம் என்பதால் நள்ளிரவில் அதிகமான மக்கள் கோவிலில் கூடியிருந்தனர். விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்தது என போலீசார் தெரிவித்தனர். ''லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருந்தது; வேகமாக வந்து மோதியதில் சிலர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்'' என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போயும் போயும் இப்படியா சாவது: ஏதாவது செய்ய நினைத்தேன்: இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
-
நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு
-
முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
-
சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி
Advertisement
Advertisement